Perambalur: Signature campaign demanding the relocation of the Ambedkar statue!

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள சட்ட மாமேதை அம்பேத்கரின் சிலையை அங்கிருந்து, நகரின் முக்கிய பகுதியான பாலக்கரை ரவுண்டானாவில் இடம் மாற்றம் செய்து தரக் கோரி விக்டிம் லீகல் வாய்ஸ் அமைப்பு சார்பில் கையெழுத்து இயக்கம் பெரம்பலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் முன்பு மூத்த வழக்கறிஞர் வாசுதேவன் தலைமையில் நடந்தது. வழக்கறிஞர்கள் ஏசுதாஸ் பால், பிரபாகரன் மற்றும் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மேலும், திரளான வழக்கறிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497