Perambalur: Snake found at new bus stand for the second time! Passengers ran away screaming!!

பெரம்பலூர் புதிய பஸ் ஸ்டாண்டு மேற்கூரையில் இன்று மதியம் சுமார் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு கீழே இறங்க முடியாமல் மேற்கூரையில் தொற்றிக் கொண்டு தவித்து வந்தது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்து லாகவமாக பாம்பைப் பிடித்து, வனப்பகுதியில் விட்டனர். கடந்த அக்டோபர் 18ம் தேதி, இதே போல் சாரைப்பாம்பை பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.










kaalaimalar2@gmail.com |
9003770497