Perambalur: Sniper competition for police officers

திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள காவல் மாவட்டங்களான திருச்சி, திருச்சி மாநகரம், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி இன்று பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள போலீசார் துப்பாக்கி சுடும் தளத்தில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஷ் பசேரா தலைமையில் நடந்தது. இந்த போட்டியில் மத்திய மண்டலத்தில் பணிபுரியும் டி.எஸ்.பி மற்றும் அதற்கு மேல் உள்ள பதவியில் உள்ள அதிகாரிகள் 10 பேர் கலந்து கொண்டனர். பிஸ்டல் மற்றும் இன்சாஸ் ஆகிய 2 வகையான துப்பாக்கிகள் பயன்படுத்தினர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!