Perambalur: SP presents anti-drug awareness song CD produced by police to Collector!
பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் தயாரிக்கப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பாடல் குறுந்தகடை போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பசேரா வெளியிட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் போதையில்லாத தமிழ்நாடு உருவாகிடும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருள் தொடர்பான உறுதி மொழியேற்பு, போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கிடும் வகையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழச்சிகளை நடத்திட அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி, பெரம்பலூர் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் இணைந்து போதைப் பொருட்கள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி, கல்லூரிகளில் நடத்துவதுடன் போதைப்பொருள் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கலெக்டர் போதைப்பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தியதன் படி, பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பாடல் தயார் செய்யப்பட்டது. இப்பாடல் அ.மேத்யூ இசையில், பெரம்பலூர் அரசு இசைப் பள்ளி ஆசிரியர் மு.நடராஜன் பாடியுள்ளார். .
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) பாலமுருகன், துணை காவல் கண்காணிப்பாளர் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) பிரபு, மங்களமேடு துணை காவல் கண்காணிப்பாளர் தனசேகரன், உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.