Perambalur: Special camp for esophagus, stomach, small intestine and colon, pancreas at Arputhaa Hospital; going on till Aug. 20! Dr. Samuel Devakumar information!!

பெரம்பலூர் அற்புதா மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர். சாமுவேல் தேவக்குமார் தெரிவித்தாவது:
பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள வெங்கடேசபுரத்தில் இயங்கி வரும் அற்புதா மருத்துவமனை மற்றும் பால்ராஜ் அறக்கட்டளை சார்பில், பொதுமக்களுக்கு உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல் மற்றும் பெருங்குடல் கணைய பிரச்சனைகளை கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் ஜுலை. 20 முதல் ஆக. 20 வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி நடக்கிறது.
இதில், வயிற்று வலி, சாப்பிட்டவுடன் வாந்தி எடுத்தல், வயிறு உப்புசம், கொஞ்சம் சாப்பிட்டவுடன் நிறைய சாப்பிட்டது போன்ற உணர்வு, வயிற்றில் பந்து உருளுவது போன்ற உணர்வு, இரத்த வாந்தி, நெஞ்சு எரிச்சல்
புளித்த ஏப்பம், உணவு விழுங்குவதில் அடைப்பு போன்ற அறிகுறிகள் இருப்பவர்களுக்கு உரிய பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்படும். ரத்த பரிசோதனை, வயிற்றுக்கான ஸ்கேன் எண்டோஸ்கோபி ஆகியவை பொதுமக்கள் நலன் கருதி 50 சதவீத சலுகை கட்டணத்தில் செய்யப்படுகிறது.
மேலும், உணவு குழாய் அடைப்பிற்கான சிகிச்சை சிறுகுடல் புண், இரைப்பை புற்றுநோய்க்கான சிகிச்சை கணைய உறுப்பின் பிரச்சனைகளுக்கான சிகிச்சை பித்தப்பை கற்கள் சிகிச்சை, பித்த நீர்ப்பாதை கற்களுக்கான சிகிச்சை, குடல் வால் போன்றவைகளுக்கும் சிகிச்சைகள் அளிக்கப்படும் என்றும், 99948 98026, 88704 71932, 88704 71934, என்ற எண்களில் முன்பதிவு செய்து கொண்டோ, அல்லது பெரம்பலூரில உள்ள அற்புதா மருத்துவமனைக்கு நேரில் வந்து முகாமில் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497