Perambalur: Special camps for adding, deleting, and correcting names in the voter list!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) 2026 இன் ஒரு பகுதியான வாக்காளர் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்து 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள் தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தி அடையும் புதிய வாக்காளர்களையும் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மேலும், இறப்பு மற்றும் நிரந்தரமான இடப்பெயற்சி காரணமாக நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் விவரங்களான பெயர், உறவினர் பெயர், உறவு முறை மற்றும் முகவரி மாற்றம் ஆகியவற்றினை திருத்தம் செய்தல் உள்ளிட்ட தேவைகளுக்காக, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குசாவடி நிலை அலுவலர்களிடமோ அல்லது வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலத்திலோ மனு தாக்கல் செய்து கொள்ளலாம்.

மேலும், இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி வாக்காளர்களின் வசதிக்காக பெரம்பலூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள 147. பொம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 387 வாக்குச் சாவடிகளிலும் மற்றும் 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 345 வாக்குச் சாவடிகளிலும் எதிர்வரும் 27.12.2025, 28.12.2025, 03.012026 மற்றும் 04.01.2026 ஆகிய நாட்களில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்தல் உள்ளிட்ட தேவைகளுக்காக சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

வாக்காளர்கள் இச்சிறப்பு முகாம்களில் இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து அவர்களின் உதவியுடன் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அளித்திடலாம். https://voters.eci.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் அல்லது Voter Helpline Mobile App என்ற கைபேசி செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து பயன்பெறலாம். வாக்காளர் உதவி எண் -1950 இணை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விளக்கம் பெறலாம்.

இவை தவிர 17 வயது பூர்த்தியடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட முன்பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு முன்பதிவு செய்தவர்கள் 18 வயது பூர்த்தியானவுடன் பெயர் சேர்க்கப்பட்டு, பின்னர் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!