Perambalur: Special education loan camp for college students; Collector information!

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர்; மாவட்ட முன்னோடி வங்கி, அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து நடத்தும் கல்விக் கடன் வழங்கும் முகாம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 27.11.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த கல்விக்கடன் வழங்கும் முகாமில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பு பயின்று வரும் மாணவ, மாணவிகள் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம். மேலும், ஏற்கனவே, pmvidyalakshmi திட்டத்தின் கீழ் பதிவு செய்து நாளதுவரை கல்விக்கடன் பெறாத மாணவ – மாணவியர்கள் அந்த விண்ணப்பங்களுடனும், புதிதாக விண்ணப்பம் செய்பவர்கள், ஆதார் அட்டை மற்றும் பான்கார்டு (மாணவ – மாணவியர் மற்றும் பெற்றோர்), பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2 (மாணவ – மாணவியர் மற்றும் பெற்றோர்), வங்கி புத்தக நகல் (மாணவ – மாணவியர் மற்றும் பெற்றோர்), அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் விவரம் (மாணவ, மாணவியர்), 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான மதிப்பெண் சான்றிதழ்,கல்லூரி சேர்க்கை கடிதம், கட்டண விவரம் குடும்ப வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், (மாணவ – மாணவியர்), முதல் பட்டதாரி சான்று (இருப்பின்) ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றும், மேலும், விபரங்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கி அலுவலரை நேரிலோ அல்லது 9442271994 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!