Perambalur: Special Grievance Redressal Day meeting for the differently-abled; Collector’s information!

பெரம்பலுார் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் வரும் 11.11.2025 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்து துறைசார்ந்த அலுவலர்கள் கலந்த கொள்வார்கள். எனவே, பெரம்பலுார் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய மாற்றுத்திறனாளிக்களுக்கான அடையாள அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயன்பெறலாம் என கலெக்டர் ந.மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!