Perambalur: Special pooja and food distribution in honor of Purattasi Shani at the Sangupettai Sri Varadaraja Perumal (Aapuran) temple!

பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில், புரட்டாசி மாதத்தில் வரும் 2வது சனிகிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், ஜவ்வாது, தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு வண்ணமலர்களால் அலங்கரித்து மாலை அணிவித்து நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகளும் செய்யப்பட்டது. பெண்பக்தர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். ஆப்பூரான் கோயிலில் அன்னதான குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பூசாரி நீதிதேவன் பூஜைகளை நடத்தி வைத்தார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!