Perambalur: Special Pournami Pooja and Annadhanam at Sangupettai Sri Muthumariamman Temple!

பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருகோயில் ஆவணி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு மாலை 6 மணிக்கு மகா தீபம் , மற்றும் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது. பால், தயிர், பன்னீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், ஜவ்வாது, தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தும், ஸ்ரீ முத்துமாரியம்மனை பூக்களால் அலங்கரித்து மாலை அணிவித்தும், மஹா தீபாராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர். உலக நன்மைக்காகவும், பருவ மழை தவறாமல் பெய்து, தன தானியம் பெருகிடவும், பொதுமக்கள் நோய் நொடி இல்லாமல் இருக்க பொதுமக்கள் பிரார்த்தனை செய்தனர். 19 வார்டு அன்னதான குழுவினர் அபிஷேக பொருட்கள், மற்றும் அன்னதானத்திற்காக ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவில் முக்கிய பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!