Perambalur: Special puja and Annadhadm at Sangupettai Sri Muthumariamman Temple!

பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருகோயில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், ஜவ்வாது, பன்னீர், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்கரித்து மஹா தீபாராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனை பெண்கள், பொதுமக்கள் வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

உலக நன்மைக்காகவும், பருவ மழை தவறாமல் பெய்து, தன தானியம் பெருகிடவும், பொதுமக்கள் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் என பொதுமக்கள் பிரார்த்தனை நடந்தது. 19 வார்டு அன்னதான குழுவினர் பூஜை மற்றும் அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கோயில் நிர்வாகி கண்ணபிரான் உள்ளிட்ட கிராம முக்கியஸ்தர்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!