Perambalur: Sports festival held at Siruvachur Almighty Vidyalaya Public School!

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா பள்ளியின் சேர்மன் முனைவர் ஆ.ராம்குமார் தலைமையில் நடந்தது. திருச்சி சுங்க மற்றும் சரக்கு சேவை வரி ஆய்வாளர் மத்திய கலால் துறை பிரான்சிஸ் சகாயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஆர். பொற்கொடி கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
மாணவர்கள் பந்துகளை சேகரித்தல், வரிசைப்படுத்துதல், வளையம் கொண்டு பயிற்சி செய்தல், தலையணை பொம்மை கொண்டு பயிற்சி செய்தல் ,போன்ற பல்வேறு குழு நிகழ்ச்சிகள் நடைபெற்றது கராத்தே , சிலம்பம் , டேக் வோண்டா என பல்வேறு நிகழ்ச்சிகளை மாணவர்கள் நிகழ்த்தி காட்டினர். தடை தாண்டி ஓட்டம்,100 மீட்டர் ஓட்டம், 4×100 மீட்டர் தொடர் ஓட்ட போட்டிகளும், நாற்று நடுதல் ,போர் அடித்தல் என விவசாயத்தை மையமாகக் கொண்டு செய்து காண்பித்தனர். கபடி ,கிரிக்கெட், கால்பந்து , கைப்பந்து ,வளையப்பந்து விளையாட்டுகளையும் மாணவர்கள் மாதிரி நிகழ்வாக நிகழ்த்தினர்.
சிறப்பு விருந்தினர்களாக, ஜோதி சிலம்பம், சத்திரிய குருகுலம் , கலைமாமணி ஜோதி செந்தில் கண்ணன், பிளாஸ்டிக் சர்ஜரி வல்லுனர் டாக்டர் நாராயணமூர்த்தி, டாக்டர் சுஷ்ருதா ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றி மாணவர்கள் மற்றும் அணிகளையும் பாராட்டி பரிசுகள், கேடயங்கள், வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டன.










kaalaimalar2@gmail.com |
9003770497