Perambalur: Stalin’s Health Project special medical camp to be held in Arumbavur tomorrow; Collector’s information!

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில் 17 உயர் சிறப்பு மருத்துவ பிரிவுகளை சார்ந்த மருத்துவர்களை கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட உள்ளன. மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட துறை வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாம்களில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு முழு உடல் பரிசோதனைகள் குறிப்பாக ரத்த பரிசோதனை, சளி பரிசோதனை, இருதய பரிசோதனை (ECG & ECHO), சிறுநீரக பரிசோதனை, உயர் ரத்த அழுத்தம், காது மூக்கு தொண்டை பரிசோதனை, கண் பரிசோதனை, பெண்களுக்கான கர்பப்பை, மார்பகம் மற்றும் வாய் புற்று நோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள், பல் மருத்துவம், நீரிழிவு மருத்துவம், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், இதய மருத்துவம், குழந்தை மருத்துவம், நுரையீரல் மருத்துவம் / மூச்சு கோளாறு மருத்துவம், தோல் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், உளவியல் மருத்துவம், இயன்முறை சிகிச்சை, ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி), கதிர்வீச்சு மருத்துவம் மற்றும் நரம்பியல் மருத்துவம் ஆகியவை 17 சிறப்பு மருத்துவர்கள் மூலம் வழங்கப்பட உள்ளன.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் நடைபெறும் உயர் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு சேவைகளை பெற்று பயனடையுமாறு கலெக்டர் ச.அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497