Perambalur: State Vice President K.I Maniratnam inaugurated the new district office of the Congress party!

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் தலைமை அலுவலகம், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், நகராட்சி அலுவகத்திற்கு பின்புறம் உள்ள தனியார் வணிக வளாகத்தில் அமைக்கபட்டுள்ளது. அதனை, அக்கட்சியின் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முனைவர்.கே.ஐ.மணிரத்னம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொது செயலாளர் வழக்கறிஞர் தங்க.தமிழ்செல்வன் மற்றும் மாவட்ட தலைவர் சி.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவாஜி.மூக்கன், மாவட்ட துணை தலைவர் பன்னீர் செல்வம், முன்னாள் மாவட்ட தலைவர் மதன், மாவட்ட துணை தலைவர் ஆசைத்தம்பி, மாவட்ட விவசாய அணி தலைவர் சித்தர், தலைவர் ராஜா, ஆலத்தூர் வட்டார தலைவர் பாக்கியராஜ், செந்துறை வட்டார தலைவர் செந்தில், மகிளா காங்கிரசை சேர்ந்த சந்திரா, அருந்தவம், ராணி, முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகினி டீச்சர், டாக்டர் மோகன், இளைஞர் காங்கிரசை சேர்ந்த ராஜீவ் காந்தி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497