Perambalur: Students protest against joining the student union and block the road!

பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள சமூக நீதி மாணவர் விடுதியில் தங்கிபயிலும் மாணவர்களிடம் விடுதி வார்டன் எந்தவிதமான சங்கங்களிலும் சேரக்கூடாது என எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து SFI மாவட்ட செயலாளர் ராமக்கிருஷ்ணன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெரம்பலூர் – துறையூர் சாலையில் இன்று காலை சுமார் 9.10 மணி அளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் பெரம்பலூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன், ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் பிரேமா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர். சுமார் 10 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.










kaalaimalar2@gmail.com |
9003770497