Perambalur: Sugarcane crushing operations begin at the Eraiyur sugar factory; the Collector and MLA inaugurated the process!

பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் அரசு பொதுத்துறை சர்க்கரை ஆலை உள்ளது. நடப்பு 2025-ம் ஆண்டிற்கான அரவை பணியை கலெக்டர் மிருணாளினி, எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் இன்று காலை தொடங்கி வைத்தனர். பெரம்பலூர் அரியலூர் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 கரும்பு கோட்டங்கள் மூலமாக 5311 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்ட பரப்பிலிருந்து சுமார் 1.5 லட்சம் டன் கரும்புகள் அறுவை செய்து சராசரியாக 9.5% சர்க்கரை கட்டுமானம் பெற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஆலை நவீனமாக்கியதில் 18 சதவீதம் மின் உற்பத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆளை தலைமை நிர்வாகி பன்னீர்செல்வம் இதில் கரும்பு பெருக்க அலுவலர் சீதாலட்சுமி, துணை தலைமை பொறியாளர் நாராயணன், தலைமை ரசாயனர் ஆறுமுகம், நிர்வாக அலுவலர் பாலன், தொழிலாளர் நல அலுவலர் ராஜாமணி, கணக்கு அலுவலர் ஜான் பிரிட்டோ, மற்றும் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன், ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீஸ்வரன், தாசில்தார் துரைராஜ், விவசாய சங்க தலைவர்கள், வேளாண் உதவியாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.









kaalaimalar2@gmail.com |
9003770497