Perambalur: Supermarket lock broken, Rs. 1.5 lakh in cash, silver coins, and a cell phone stolen!

பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மதரசா சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜா மனைவி சாந்தா (50), இவர் பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் Vins World டிபார்ட்மெண்ட் ஸ்டோர் கடந்த ஜுன் மாதம் முதல் நடத்தி வருகிறார். வழக்கம் போல் கடையை மூடி விட்டு அதன் மேலாளர் சேஷாத்திரி (45) இன்று காலை சுமார் 8.45 மணி அளவில் கடையை திறக்க வந்த போது , கடையின் மற்றொரு கதவு உடைக்கப்பட்டிருப்பதை அறிந்து கடையின் ஓனர் மற்றும் பெரம்பலூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் கடையினுள் இருந்த ரொக்கம் ரூ.1.5 லட்சம், 400 கிராம் வெள்ளி காசுகள், ஒரு ஸ்மார்ட் போன் ஒன்றை கொள்ளையர்கள் எடுத்து சென்றது தெரியவந்தது. வழக்குப் பதிவு செய்த போலீசார் கடையில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும், தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடனும் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி வணிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், கொள்ளை போன சூப்பர் மார்க்கட் கடையின் மேற்பகுதியில் இருந்து மிக ஆபத்து நிறைந்த அதிக உயர்அழுத்த மின்சாரம் அருகே உள்ள துணை மின்நிலையத்திற்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!