Perambalur: Teachers’ Day celebration at Siruvachur Almighty Vidyalaya Public School!

பெரம்பலூர் அருகே உள்ள ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் ஆசிரியர் தின விழா பள்ளி சேர்மன் முனைவர் ஆ.ராம்குமார் தலைமையில் நடந்தது. துணை சேர்மன் மோகனசுந்தரம் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர்கள் சாரதா, சந்திரோதயம், வித்யா, மற்றும் மேல்நிலை வகுப்பு இயக்குனர் முனைவர் கார்த்திக், துணை முதல்வர் ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் ஹனிபா உள்பட பள்ளியின் வகுப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மாணவ – மாணவிகள் கவிதை ,நடனம், நாடகம், ஆசிரியர்களின் பெருமை குறித்த ஒளிப்படம் ஆகிய பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தினர். ஆசிரியர்களுக்கு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டது. பள்ளியின் சேர்மன், முதல்வர்கள், துணை முதல்வர், மேல்நிலைப்பள்ளி இயக்குனர், ஒருங்கிணைப்பாளர், மற்றும் ஆசிரியர்கள் பெருமை குறித்து பேசினர். பின்னர், ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி கவுரப்படுத்தப்பட்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497