Perambalur: The 41st death anniversary of the great farmer leader Narayanasamy Naidu; Tributes paid by the Tamil Nadu Farmers’ Association with the laying of garlands!

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 41 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலுள்ள அவரது உருவ சிலைக்கு பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் சார்பில், மாவட்ட தலைவர் நீலகண்டன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அவரது தியாகத்தினை போற்றும் வகையில் மலரஞ்சலியும், மவுன அஞ்சலியும் விவசாயிகள் செலுத்தினர்.

அதனையடுத்து, விவசாயிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் மழை மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம், மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் பற்றி முறையாக கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கிடவும், பயிர் காப்பீட்டு இழப்பீடு வழங்கிட வலியுறுத்தியும், விவசாயிகள் பாரம்பரிய விதை உற்பத்தி மற்றும் பகிர்வதை பாதிக்கும் வகையிலும் பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள விதைச்சட்டம் 2025 ஐ கைவிட வலியுறுத்தியும் கோரிக்கை முழக்கமிட்டனர்.

மாவட்ட பொருளாளர் மணி, திருச்சி மாவட்ட செயலாளரும், பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவருமான கணேசன் முன்னிலை வகித்தனர். செல்லக்கருப்பு, ராமசாமி, செல்லப்பிள்ளை உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!