Perambalur: The Tamil Nadu Chief Minister inaugurated development projects worth Rs. 10.78 crore via video conference!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட எலந்தங்குழி ஊராட்சியில் ரூ.13.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக் கடையினையும், செட்டிகுளம் ஊராட்சியில் ரூ. 42.96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கிராம ஊராட்சி செயலகத்தினையும், குன்னம் வட்டாரத்திற்குட்பட்ட சிறுகுடல் ஊராட்சியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள கணினி வகுப்பறை கட்டடத்தையும்,

பெரம்பலூர் வட்டம், மேலப்புலியூர் ஊராட்சியில் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறையும், எசனை ஊராட்சியில் ரூ.46.42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிராம செயலத்தினையும், வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட பசும்பலூர் ஊராட்சியில் ரூ.1.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தினையும், நெய்க்குப்பை ஊராட்சியில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறையினையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூரில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடத்தையும், வேப்பந்தட்டை வட்டாரத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டத்தையும், வாலிகண்டபுரம் ஊராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வட்டார பொது சுகாதார அலகு கட்டங்கள் என மொத்தம் ரூ.10.78 கோடி மதிப்பீட்டில் 9 புதிய கட்டங்களை திறந்து வைத்தார்.

வேப்பூர் அரசு மருத்துவமனையில் புதியதாக திறக்கப்பட்ட கூடுதல் கட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை, செட்டிகுளம் மற்றும் எசனை கிராம ஊராட்சி செயலகம், மேலப்புலியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பசும்பலூர் ஆரம்ப சுகாதார நிலையம், நெய்க்குப்பை ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி வாலிகண்டபுரம் புதிய வட்டார பொது சுகாதார அலகு என புதியதாக திறக்கப்பட்ட கட்டங்களில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் குத்து விளக்கேற்றி பார்வையிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், முதன்மை மருத்துவ அலுவலர்கள் ஜெயந்தி, பாரதிபிரியா, குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ம.ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!