Perambalur: Tomorrow, a review meeting will be held under the chairmanship of the Tamil Nadu State Minorities Commission; Collector’s information!

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சொ.ஜோ அருண் சே.ச. தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்த குழு நாளை பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகைதர உள்ளார். சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளையும் காலை 10.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்ட அரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் மற்றும் கருத்துக்களை கேட்டறியவும் உள்ளனர்.

சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரிதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சார்ந்த பொதுமக்களின் பிரிதிநிதிகள் அனைவரும் மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழுவினரை சந்தித்து தங்களது குறைகளையும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்கான தக்க கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கலெக்டர் ந.மிருணாளினி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!