Perambalur: Tourist van falls into roadside ditch; 7 injured!

சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் குற்றாலத்துக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் சுற்றுலா சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு அவர்கள் சென்னைக்கு மீண்டும் திரும்பி சென்று கொண்டிருந்தனர். வேனை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள புங்கனூரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் விக்னேஷ் (40) என்பவர் ஓட்டி சென்றார்.
நேற்று அதிகாலை வேன், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது, மேம்பாலம் பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த 5 அடி பள்ளத்தில் வேனின் இறங்கி விபத்திற்குள்ளானது. இதில் வேனில் சென்ற சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த கலா (53), இளவரசி (55), சரளா (45) உள்பட 7 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497