Perambalur: Training for civil service competitive exams for young graduates from the fishing community; Collector information!

தமிழ்நாடு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான பயிற்சி நிலையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி மீனவ இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டி தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது.

கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்று கொள்ளலாம்.

விண்ணப்ப்பதாரர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி படிவத்தை பூர்த்தி செய்து அரியலூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், அறை எண். 234, 2 வது மேல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அரியலூர் – 621704 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 25.11.2025 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு அரியலூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் அலுவலகம், SKC காம்பளக்ஸ், பெரம்பலூர், அல்லது 8838946011 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனகலெக்டர் ந.மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!