Perambalur: Truck crashes into tamarind tree; driver dies! Police investigating!

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள திருவளக்குறிச்சியை சேர்ந்த ஜீவா மகன் மணிகண்டன் (32). திருமணமாகத இவர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் இன்று அதிகாலை 4 மணியளவில் திருவளக்குறிச்சியில் இருந்து ஜல்லி ஏற்றுவதற்காக இரூர் பகுதியில் உள்ள கிரஷருக்கு லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர புளிய மரத்தில் பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில், லாரியின் முன்பகுதி நொறுங்கி சேதமடைந்தது. பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!