Perambalur: TVK will not be able to win by a large margin in the upcoming elections: Interview with MMK state president Jawahirullah!

பெரம்பலூரில், செய்தியாளர்கைள சந்தித்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா அளித்த பேட்டியில் தெரிவித்தாவது:
43 லட்சம் மாணவர்களும், 2.2 லட்சம் ஆசிரியர்களும் பயன்பறும் எஸ்.எஸ்.ஏ கல்வி திட்டத்திற்கு மத்திய வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 2152 கோடியை வழங்காதை கண்டித்து தொடர் காங்கிரஸ் நாடளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் காலவரையற்ற பட்டினி போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு மனிதேநேய மக்கள் கட்சி சார்பில் அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, அவர் ஒரு நல்ல ஐஏஎஸ் அலுவலராக பணிபுரிந்தவர். நல்ல நோக்கத்திற்காக அவர் எதிர்ப்பை பதிவை செய்து விட்டதால், அவர் அந்த போராட்டத்தை கைவிடவேண்டும்,
ஒன்றிய அரசு பல்வேறு வகைகளில் வஞ்சித்தாலும், தமிழ்நாடு வளர்ச்சியின் பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. நமது தமிழ்நாடு முதலமைச்சர் எல்லா வகைகளிலும் தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் எடுத்து சென்றுக் கொண்டிருக்கிறார். முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு சென்றிருப்பதை வரவேற்கிறோம்.
மேலும், தவெக தலைவர் விஜய் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, முதல்முறையாக அவர் தேர்தலை சந்திக்கின்றார். நேரடியா அரசியல் களத்தில் இறங்குகிறார். அவருடைய கட்சியின் நிலை எப்படி இருக்கும் என்பது, இப்போது கடந்த கால அனுபவங்களை வைத்து பார்க்கும் போது, அவர் பெரிய அளவில் தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலில் சோபிக்கமாட்டார். அவருக்கு பெருமளவு மக்களுடைய ஆதரவு இருக்காது. ஒரு நடிகராகவும் இருக்க கூடிய சூழலில், மாநட்டுக்கு வந்திருக்கும் கூட்டத்தை வைத்துக் கொண்டு, தேர்தல் அரசியலை நிர்ணயிக்க முடியாது. ஏனென்றால், தேர்தல் என்பது தனிக்கலை. நீங்க பொதுக்கூட்டம் நடத்தலாம், மாநாடு நடத்தாலாம், ஏரளாமான லட்சோபலட்ச மக்கள் பங்கு பெறலாம். அது எதாவது ஒரு பேச்சுக் கவர்ச்சி அல்லது நடிகர் என்ற கவர்ச்சியினால் மக்கள் வரலாம்.
வாக்களிக்க போகும் போது, தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடிய முடிவை எடுக்கும் போது, அவர்களுடைய டிராக் ரெக்கார்டை எடுத்து கடந்த செயல்பாடு வைத்துதான் முடிவு எடுப்பபார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டு அரசியலில் சட்ட மன்ற தேர்தலில், பெருமளவிற்கு அவரால் வெற்றி பெறமுடியாது. நிச்சயமாக திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு அடுத்த நிலைக்குதான் செல்லக்கூடிய சூழல் ஏற்படும் என்றார்.
வரும் தேர்தலில் கூடுதல் சீட் கேட்பீர்களா? என்ற வினாவிற்கு, கடந்த 2021 சட்ட மன்ற தேர்தலில் மணப்பாறை, பாபநாசத்திலும் வெற்றி பெற்றோம், அந்த அடிப்படையில் கூடுதலாக தொகுதிகளை கேட்போம் என்றும் தெரிவித்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் மமக பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் குதரத்துல்லா உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் பலர் உடன் இருந்தனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497