Perambalur twins training hard to participate in 2024 Olympics!

மருத்துவக் கல்லுாரியில் பயிலும் மாணவர்களான இரட்டை சகோதரர்கள், 2024ல், பாரிசில் நடக்கும் ஒலிம்பிக்கில் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக, தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர்.

பெரம்பலுார், ராஜா நகரை சேர்ந்தவர் செல்லப்பிள்ளை, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் டீ கடை வைத்துள்ளார். இவரது மனைவி பிரபா வேப்பூர் யூனியன் சேர்மனாக உள்ளார். இவர்களின் மகன்கள் சூர்யா, 19, விஜய், 19; இரட்டையர்களான இருவரும், பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர். சிறு வயது முதலே இருவரும், படிப்பிலும், டென்னிஸ் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர்.

இதையறிந்த, பெற்றோர் அவர்களை ஊக்கப்படுத்தியதுடன், பயிற்சிக்கும் அனுப்பினர்.
இரட்டையர்களான இருவரும் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளை குவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்று, கல்லுாரி நிர்வாக ஒதுக்கீட்டில், பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லுாரியில் மருத்துவம் பயின்று வருகின்றனர்.

கடந்த 30ம் தேதி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் நடந்த தமிழகம் மற்றும் புதுச்சேரி அளவிலான மருத்துவ கல்லுாரிகளுக்கிடையேயான டென்னிஸ் போட்டியில், ஒற்றையர் ஆட்டத்தில் விஜய் முதலிடம் சூர்யா இரண்டாமிடம் பெற்றனர். இரட்டையர் பிரிவில், இவர்கள் இருவரும் வெற்றி பெற்றனர்.


டென்னிஸ் போட்டியில், தொடர் கோப்பைகளை குவித்து வரும், இரட்டையர்கள் , 2024ல் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடக்கும் ஒலிம்பிக்கில் போட்டியில், பங்கேற்பதற்காக, பயிற்சி எடுத்து வருகின்றனர். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதுடன், கின்னஸ் சாதனையும் செய்ய வேண்டும் என்பதே குறிக்கோள், என அவர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

மருத்துவ கல்லூரி மாணவர்களும், இரட்டையர்களுமான சூர்யா – விஜய் வெற்றி பெற்று பெரம்பலூரை பெருமை அடைய செய்ய பெருமிதத்துடன் வாழ்த்துவோம்!

விளம்பரம்:


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!