Perambalur: Two people died in different accidents!

பெரம்பலூர் மாவட்டம், பேரளி மற்றும் இரூர் அருகே நடந்த சாலை விபத்துகளில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வரகூரை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் அருளானந்தம் (45), இவர் பெரம்பலூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள காபிபாரில் கேசியராக உள்ளார். இன்று மாலை பணிக்கு செல்வதற்காக, வரகூரில் இருந்து பெரம்பலூருக்கு தனது ஸ்கூட்டரில் அரியலூர் – பெரம்பலூர் சாலையில் வந்து கொண்டிருந்தார். பேரளி கிராமத்திற்கும் கல்பாடி பிரிவுக்கும் இடையே உள்ள ஸ்டீல் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த மருவத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோதிவிட்டு நிற்காமல் தப்பி சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
மற்றொரு விபத்து:
பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில், வேலை தேடி கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு பைக்கில் சென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இருந்து திண்டிவனம் நோக்கி லோடு ஏற்றுவதற்காக லாரி ஒன்று திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த செட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சக்திவேல் என்பவர் ஓட்டினார். லாரி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே இரூர் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், வாகனங்கள் அனைத்தும் இரூர் பேருந்து நிறுத்தம் சர்வீஸ் சாலையில் செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் லாரி சர்வீஸ் சாலைக்கு திரும்ப முயன்ற போது அந்த வழியாக கன்னியாகுமரி மாவட்டம் குழி துறை தாலுகா அன்பையன் தல விளை கிராமத்தைச் சேர்ந்த செல்வன் மகன் சஜீத் (25).என்பவர் ஓட்டி வந்த கேடிஎம் பைக் லாரி மீது விபத்து ஏற்பட்டது. இதில், பின்பக்கத்தில் சஜீத் மோதி கீழே விழுந்ததால். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சஜீத் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த பாடாலூர் போலீசார் லாரி டிரைவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வேலை தேடி சென்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சாலை பணிகள் நடக்கும் பொழுது முறையான சமிக்கைகளை உரிய தூரத்திற்கு முன்னரே செய்து வேண்டும் என வாகன ஓட்டிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497