Perambalur Union Mathar Sangam Conference resolves to provide 100 days employment to urban people.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பெரம்பலூர் ஒன்றிய 8வது மாநாடு பெரம்பலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாதர் சங்க நிர்வாகி கே.ராணி தலைமை வகித்தார் ஷர்மிளா பேகம் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் அ.கலையரசி கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார்.

தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் நகர்ப்புற மக்களுக்கும் வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், உயர்வை மாதாமாதம் மத்திய அரசு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்துவதால் ஏழை எளிய மக்கள் பாதிக்கின்றனர். எனவே, உடனடியாக எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், பெரம்பலூர் மாவட்டத்தில் பெருகிவரும் திருட்டு சம்பவங்கள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும், பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏழை எளிய வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் மாதர் சங்க புதிய ஒன்றிய நிர்வாகிகளாக ஷர்மிளாபேகம் தலைவராகவும், வி.கோவிந்தம்மாள் செயலாளராகவும் பொருளாளர் எம்.புவனேஸ்வரி, துணைத் தலைவர் கே.ராணி, துணை செயலாளராக எம்.பூங்கொடி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகி ஜெயலட்சுமி நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!