Perambalur: Veppanthattai Court rejects plea to police custody in savukku Sankar case! Own bail!
ஊட்டி, ஆத்தூர் வழக்குகளில் ஆஜராகிவிட்டு வந்த சவுக்கு சங்கர், திருச்சி ஐபிஎஸ் அதிகாரி அருண் மற்றும் பெண் போலீசாரை இணைத்து பேசிய வழக்கில் பெரம்பலூரிலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணைக்கு இன்று சவுக்கு சங்கர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பர்வத்ராஜ் ஆறுமுகம் சவுக்கு சங்கரை போலீசார் கஸ்டடி கேட்டதற்கு மறுத்துவிட்டார் . சவுக்கு சங்கரின் உடல் நிலை மற்றும் வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு அவருக்கு சொந்த ஜாமீன் வழங்கினார். ஒரு வாரத்திற்குள் இரு நபர் மற்றும் பிணையத் தொகை ரூ 20 ஆயிரத்தை செலுத்த உத்தரவிட்டார். பின்னர், போலீசார் அவரை சிறைக்கு அழைத்து சென்றனர். இந்த வழக்கிற்கு வழக்கறிஞர்கள் கணேசன், கார்த்திக், சுகுமார் ஆகியோர் ஆஜராகினர். வேப்பந்தட்டை நீதிமன்றத்துக்கு வந்த சவுக்கு சங்கரை காண பொதுமக்கள் ஏராளமானோர் காத்திருந்து பார்த்து சென்றனர்.