பெரம்பலூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான டாக்டர்.தரேஸ் அஹமது அனைத்து கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெளியிட்டார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தொடர் திருத்தத்தின் போது 147-பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 70 ஆயிரம் 284 வாக்காளர்களும், 148-குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 51 ஆயிரம் 016 வாக்காளர்களும் ஆக மொத்தம் 5 லட்சத்து 21 ஆயிரம் 300 வாக்காளர்களும் இடம் பெற்றிருந்தனர்.
அதன் பின்னர் நடைபெற்ற சிறப்பு சுருக்க திருத்தத்திற்கு பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பான படிவங்களில் 7,495 ஆண் வாக்காளர்களும், 8,273 பெண் வாக்காளர்களும் இதர 3 வாக்காளர்களும் புதிதாக சேர்க்கப்பட்டனர்.
இதில் 147-பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 4,144 பேரும், பெண் வாக்காளர்கள் 4,421பேரும், இதர 2 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். 148-குன்னம் சட்டமன்றத் தொகுதியில் 3,351 ஆண் வாக்காளர்களும் , 3852 பெண் வாக்காளர்களும், இதர1 நபரும் சேர்க்கப்ட்டுள்ளனர். ஆக மொத்தம் 15, 771 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 6,243 வாக்களார்கள் இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு காரணமாக நீக்கம் செய்யபட்டுள்ளனர்.
இன்று 20.01.2016 வெளியிடப்படுகின்ற இறுதி வாக்காளர் பட்டியலின்படி 147-பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்கு சாவடிகளில் 2,75,932 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 1,35,127, பெண்கள் 1,40,792 இதர 13 நபர்களும் உள்ளனர்.
148-குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 316 வாக்கு சாவடிகளில் 2,54,896 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 1,26,996, பெண்கள் 1,27,889 இதர 11 நபர்களும் உள்ளனர்.
ஆக மொத்தம் பெரம்பலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 30 ஆயிரத்து 828 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2,62,123 பேரும், பெண்கள் 2,68,681 பேரும், இதர 24 பேரும் உள்ளனர்.
வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப் பணியை முன்னிட்டு சிறப்பு முகாம் 31.01.2016 மற்றும் 06.02.216 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் 01.01.2016 தேதியன்று தகுதியான நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியான வாக்காளர்கள் தங்கள் பெயர்களை புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கவோ, நீக்கவோ, பெயர், முகவரிகளில் திருத்தங்களை மெற்கொள்ளவோ விண்ணப்பிக்கலாம், என தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது சார் ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) ச.மாரிமுத்து, தேர்தல் வட்டாட்சியர் மனோண்மணி, அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.