Perambalur: Wife goes missing after removing her thali because her husband objected to her talking on the mobile phone; police investigating.

பெரம்பலூர் அருகே அணைப்பாடி கிராமத்தில் செல்போனில் அடிக்கடி மனைவி பேசுவதை கணவன் கண்டித்தால் தாலி, கொலுசுகளை கழற்றி வீட்டில் வைத்துவிட்டு சென்ற இளம்பெண்ணை மாயமானார். மனைவியை கண்டுபிடித்துத் தருமாறு போலீசில் கணவன் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் அருகே உள்ள அணைப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுவேல் மகன் ராஜேந்திரன் (33) என்பவருக்கும், பிரியதர்ஷினி (20) என்பவருக்கும் கடந்த சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. திருமணமான 5 மாதங்களுக்குப் பிறகு, பிரியதர்ஷினி செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது செல்போனை ராஜேந்திரன் வாங்கி வைத்துக் கொண்டராம். இது தொடர்பாக கடந்த 7-ம் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், இதையடுத்து, ராஜேந்திரன் வேலை தொடர்பாக அன்று மதியம் 2.30 மணியளவில் பெரம்பலூருக்குச் சென்ற நிலையில், மாலை சுமார் 4.30 மணியளவில், பிரியதர்ஷினி தான் அணிந்திருந்த தாலி மற்றும் கொலுசுகளைக் கழற்றி வீட்டில் வைத்துவிட்டு வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. ராஜேந்திரன் உறவினர்கள் உதவியுடன் பல இடங்களில் தேடியும் பிரியதர்ஷினி கிடைக்காததால், தனது மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு நேற்றிரவு மருவத்தூர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் செல்போன் அழைப்பு விவரங்களை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.









