Perambalur: Woman arrested for selling 8 kg of gutka banned by the government!

பெரம்பலூர் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில் கீழப்பெரம்பலூர் கிராமத்தில் தனவேல் மனைவி ஆபர்ணம் (50) என்பவர் தனக்கு சொந்தமான மளிகை கடையில் அரசு தடை செய்த குட்கா பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்தது. குன்னம் போலீசார் ஆபரணத்தை கைது செய்து அவரிடமிருந்து (5.700 கிலோ கிராம் ஹான்ஸ், 1.725 கிலோ கிராம் விமல் பாக்கு மற்றும் 0.690 கிராம் V1-பான் மசாலா என மொத்தம் 8.115 கிலோ கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497