Perambalur: Woman riding bike falls and dies after dog crosses her path! Tragedy unfolds in front of son’s eyes!!

திருச்சி மாவட்டம், ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த முபாரக் அலி மனைவி குருஷித் பேகம் (54), மகன் சாதிக் பாஷா (30) ஆகிய இருவரும் தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்விற்காக திருச்சியிலிருந்து, கடலூர் மாவட்டம் தொழுதூரை நோக்கி இன்று அதிகாலை பைக்கில் சென்றனர். பைக் சாதிக் பாஷா ஓட்ட, அவரது தாய் குருஷித் பேகம் பின்புறத்தில் உட்கார்ந்து சென்றார். பைக் பெரம்பலூர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே உள்ள விஜயகோபாலபுரம் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே நாய் ஒன்று திடீரென வந்ததால் சாதிக் பாஷா பிரேக் பிடித்தார். இதில் பின்னால் உட்கார்ந்திருந்த அவரது தாய் குருஷித் பேகம் தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குருஷித் பேகம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த பாடாலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!