Perambalur: Women stage road blockade with empty pots demanding drinking water supply!

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகரில் கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் ஊராட்சி சார்பில் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று சுமார் 8.30 மணி அளவில் ஒன்று திரண்ட அப்பகுதி மக்கள் திடீரென பெரம்பலூர் – எளம்பலூர் சாலையில் உப்போடை அருகே காலிகுடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வருவாய், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பெரம்பலூர் டவுன் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தியதுடன் உடனடியாக டிராக்டர் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுவதாக உறுதி அளித்தன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் கால் மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!