Social activist files petition seeking action on a plea to stop the practice of inflicting harm on trees by driving nails into them for advertisements.

Imagae Credit: Google Gemeni AI

பெரம்பலூர் அருகே பேரளி கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சி.ராகவன் பொதுமக்கள் குறைத்தீர் கூட்டத்தில் கொடுத்த மனுவின் விவரம்:

சூப்பர் எல் நினோ விளைவுகள், கால நிலை மாற்றம், பருவ மழை மாறுதல்கள் உள்ளிட்டவைகள் பற்றி உலகளவில் தற்போது வெகுவாக பேசப்படுகிறது. இந்த மாறுதல்களை சமாளிக்க, அல்லது தீவிரத்தைக் குறைக்க பல்வேறு வழிமுறைகளை சூழலியாளர்களும் அறிஞர்களும் அறிவுறுத்திக் கொண்டிருக்கின்றனர். அதில் முக்கியமானவையாக காடுகள் பாதுகாப்பு, மரங்கள் பாதுகாப்பு மற்றும் வளர்ப்பு தொடர்பாகவும் பேசப்படுகிறது. இந்நிலையில் சாலை விரிவாக்கத்திற்காக பல சாலையோர மரங்கள் ஏற்கனவே வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளது.

சாலையோரம் மற்றும் பொது இடங்களில் எஞ்சியுள்ள மரங்களும், தற்போது தனியார் நிறுவனங்களின் அல்லது தனிநபர்களின் நலனுக்காக ஆணி மற்றும் கம்பிகளைப் கொண்டு மாட்டப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை ஏந்தி விளம்பரத் தூதுவர்களாக நிற்கும் அவல நிலை பெரம்பலூரில் நிலவுகிறது. இச்செயல்களினால் மரங்கள் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி ஏற்கனவே மாவட்டம் முழுவதும் உள்ள மரங்களில் அடிக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்றக் கோரியும், இனி யாரும் அதுபோன்ற செயல்களில் ஈடுபடாதவாறு தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் கோரி கடந்த 18-5-2026 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு அளித்திருந்தேன். அதற்கு பதிலாக வருவாய் கோட்டாட்சியரிடம் இருந்து 25-8-26 அன்று பதில் கடிதம் கிடைத்தது. அதில் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மரங்களில் ஏற்கனவே அடிக்கப்பட்டுள்ளவைகளை அகற்றி அறிக்கை சமரப்பிப்பதோடு மேற்கொண்டு இந்த நிகழ்வுகள் நடைபெறாதவாறு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்றளவும் மரங்களில் விளம்பரப் பதாகைகளை பார்க்க முடிகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள மரங்களிலேயே இப்படி உள்ளது பெருத்த ஏமாற்றத்தையே தருகிறது. ஆகையினால் பொதுநலன் மற்றும் சூழலியல் நலன் கருதி அளிக்கப்பட்ட இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வாழ்வு தரும் மரங்களைக் காக்க உரிய முயற்சிகளை மேற்கொள்ளும்படி கோருகிறேன் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!