Perambalur: Women disappointed as government buses fail to stop, hindering their journeys!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆத்தூர் – பெரம்பலூர் வழித் தடத்தில் செல்லும் அரசு பஸ்கள் உரிய பஸ் ஸ்டாப்பில் ஏற்றி செல்லாததால் வெற்றி பயணத்திட்டத்தில், மாணவிகள் உரிய நேரத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடியாமலும், பெண்கள் உரிய நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர். பெரும்பாலான பஸ்களில் தமிழ்நாடு அரசு சுமார் 80 கி.மீ தூரம் பெண்கள் செல்ல வெற்றிப்பயணம் என்ற திட்டத்தில் கட்டணமில்லாமல் பயணிக்க அறிவிப்பு செய்துள்ளது. ஆனால், திட்டம் தொடங்கி கடந்த 10 நாட்கள் ஆன நிலையில் உரிய நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்தி பெண்களை ஏற்றிச் செல்லாததால் பெண்கள் தற்போது மீண்டும் கட்டணம் செலுத்தி தனியார் பஸ்களில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சாமி வரம் கொடுத்தும் பூசாரி கொடுக்காத கதையாக அரசு பஸ்கள் டிரைவர்கள் செய்யும் அலட்சியங்களால் பெண்கள் பெரும் சிரமம் அடைகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை வெற்றிப் பயணம் அனைத்து தரப்பு பெண்களுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!