Perambalur: Youth arrested in murder case of driver who asked for alcohol!

பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநந்தம் அருகேயுள்ள கொளத்தூரை சேர்ந்தவர் வீராசாமி மகன் சுரேஷ் (37), டிரைவர். இவர் மீது பலாத்காரம், கொலை முயற்சி, தாக்குதல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக பல முறை சிறை சென்று திரும்பியுள்ளார். மதுபோதைக்கு அடிமையான சுரேஷ், நேற்று காலை கொளத்தூர் பகுதியில் வீட்டுடன் இணைந்த பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்தவர்களிடம் சென்று இலவசமாக மதுபானம் தருமாறு சுரேஷ் கேட்டுள்ளார். அப்போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் பெட்டிக்கடை வைத்திருந்தவர்கள் சுரேஷை சரமாரி தாக்கி கொலை செய்தனர். சுரேஷின் உறவினர்கள் உடலை தீவைத்து எரிக்க முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த விஓஏ கமல்ஹாசன் சுரேஷ் உடலை கைப்பற்றி மருவத்தூர் போலீசிடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று இந்த கொலை தொடர்பாக பிலிமிசை கிராமத்தை சேர்ந்த அன்பழகன் மகன் அறிவழகன் (33) என்பவரை கைது செய்து, கொலைக்கான காரணம் மற்றும் தலைமறைவானர்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!