Perambalur: Youth hacked to death: Sub-inspectors transferred!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள கை.களத்தூரில், நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தின் ஓட்டுனராக பணியாற்றி வந்த மணிகண்டன் என்பவர் அதே ஊரை சேர்ந்த சக ஓட்டுனரான தேவேந்திரன் என்பவரால் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிற நிலையில், கொலையாளி தேவேந்திரன், கொலைக்கு உடந்தையாக செயல்பட்டதாக தலைமை காவலர் ஸ்ரீதர், நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தின் உரிமையாளர் அருண் மீது SC – ST உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கை.களத்தூர் காவல் நிலையத்தில் சப் – இன்ஸ்பெக்ராக பணியாற்றி வரும் சண்முகம், எஸ்.எஸ்.ஐ – யாக பணியாற்றி வரும் கொளஞ்சி, குமார், மணிவேல் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொறுப்பை உணராமல், கடமையை மறந்து குற்றவாளி தேவேந்திரனை கொலைச் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு லிப்ட் கொடுத்து அழைத்துச் சென்ற தலைமை காவலர் ஸ்ரீதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ்பசேரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.