Perambalur: ₹3 lakh fine for 7 people who attempted to butcher a wild boar!

பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் அருகே உள்ள அரசலூர் கிராமத்தில் 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று, காட்டுப்பன்றியை சமைக்க கூறு போட்டுக் கொண்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வேப்பந்தட்டை வனச்சரக அலுவலர் பழனி குமரன் தலைமையில் வனவர் அஜித்குமார் வனக்காப்பாளர் அன்பரசு, வன காவலர் சிவரஞ்சனி ஆகியோர் குழுவாக ரோந்து சென்று அந்த 7 பேரையும் மடக்கிப்பிடித்தனர். அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில், கிருஷ்ணாபுரம் அடுத்த வெங்கனூர் கிராமத்தில் வயலில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கிய காட்டுப்பன்றியை அரசலூர் கிராமத்திற்கு கொண்டு வந்து கூறு போட்டு சமைக்க முயன்றது தெரியவந்தது. அதோடு அந்த கும்பலை சேர்ந்தவர்களான வெங்கனூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் தினேஷ் மற்றும் அரசலூரை சேர்ந்த நல்லான் மகன் மணிகண்டன் ஆகிய இருவருக்கும் தலா ரூ. 50 ஆயிரம் அபராதமும், பொன்னுசாமி மகன் ரவி, மனோகரன் மகன் பிரவீன், மூர்த்தி மகன் குமரேசன், கலியபெருமாள் மகன் முத்தையன் அரியான் மகன் பொன்னுசாமி ஆகிய 5 பேருக்கும் தலா ரூ.40 ஆயிரம் அபராதம் என மொத்தம் 3 லட்ச ரூபாய் அபராதமாக வனத்துறையினர் விதித்தனர். மேலும், வன உயிரினங்கள் வேட்டையாடப்பட்டால் இனி வரும் காலங்களில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!