Petition on behalf of Perambalur District Tha.Mu.A.Ka.Sa to ensure the use of Tamil language in Bank ATM machines
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தினர் பெரம்பலூர் மாவட்டக் குழு சார்பில் பெரம்பலூர் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தலைமை தபால் நிலைய அலுவலகங்களில் ஏடிஎம் தானியங்கி இயந்திரம் மற்றும் பரிவர்த்தனை படிவங்களில் தமிழ்மொழி பயன்பாட்டினை உறுதி செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனுவை உரிய அலுவலர்களிடம் கொடுத்தனர். தமுஎகச மாவட்ட செயலாளர் ப.செல்வகுமார், மாவட்ட தலைவர் அகவி, துணைத் தலைவர் ஆ.ராமர் மற்றும் குழு உறுப்பினர்கள் பாரதிஆறுமுகம், தங்கராசு ஆகியோர் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் பணபரிமாற்ற நடவடிக்கைகளுக்காக பணம் வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தை இயக்குகிற போது ஆங்கிலம், இந்தி ஆகிய 2 மொழிகள் மட்டுமே வாய்ப்பாக வழங்கப்பட்டிருக்கிறது. தமிழை தாய் மொழியாக கொண்ட எங்களுக்கு இது மிகுந்த இடர்பாட்டையும் நேரவிரயத்தை ஏற்படுத்துவதோடு பண இழப்பையும் ஏற்படுத்துகிறது. எனவே அனைத்து பணம் வழங்கும் இயந்திரங்கள் மற்றும், வங்கி பரிவர்த்தனை படிவங்கள் ஆகியவற்றில் தமிழ்மொழி பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் தெரிவித்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!