Petition protest at electricity board offices demanding withdrawal of electricity tariff hike: Perambalur Communist Party meeting resolves.
இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டக் குழு கூட்டம் துறைமங்கலத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கநாதன் தலைமையில் நடந்தது. மாநிலக்குழு சாமி.நடராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.செல்லதுரை, அ.கலையரசி, எஸ்.அகஸ்டின், எஸ்.பி.டி.ராஜாங்கம், ஆர்.கோகுலகிருஷ்ணன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.செல்லமுத்து, எம்.செல்லதுரை, ஏ.கே.ராஜேந்திரன், எஸ்.சிவானந்தம், எம்.கருணாநிதி, எஸ்கே.சரவணன், பி.ரெங்கராஜ், ஆர்.மகேஸ்வரி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மாவு வகைகள், வெல்லம் மோர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதம் விதிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையால் ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்க்கை சீர்குலைக்கும். எனவே, உடனடியாக ரத்து செய்ய வேண்டும், சென்னையில் நடைபெற்ற குடும்ப வன்முறை எதிர்ப்பு மாநாட்டு முடிவுகளின் படி பெரம்பலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 5 அன்று சமத்துவ ஜனநாயகமிக்க ஆரோக்கியமான குடும்பங்களை உருவாக்க கல்வி நிலையங்கள், பொது இடங்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும் கட்சியின் மத்தியக் குழு அடிப்படையில் 9.8.2022 முதல் 15.8.2022 வரை தேச விடுதலை போராட்ட நிகழ்வுகளை நினைவுபடுத்தி அரசிய சாசனத்தின் சமத்துவ மதசார்பற்ற ஜனநாயக அம்சங்களை உயர்த்திப்பிடிக்கும் நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் அனைத்து கிளைகளிலும் தேசியக் கொடி ஏற்றி உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடத்துவது, மோடி அரசின் 8 ஆண்டு கால ஆட்சியின் கொடுமைகளை கண்டித்து ஆகஸ்ட் 25 முதல் 31 வரை மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தவும், தமிழக அரசு அறிவித்துள்ள உத்தேச மின்கட்டண உயர்வு நடுத்தர குடும்பத்தினருக்கும் வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும், ஏற்கனவே ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப்பெற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட மக்களை அணி திரட்டி மின்வாரிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட நிதியை ஒதுக்குவதை கைவிட வேண்டும், பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெறும் குவாரி மற்றும் கிரஷர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு கடந்த சில தினங்களுக்கு முன் பெரம்பலூர் அருகே கவுள்பாளையம் குவாரியில் பாறை சரிந்து இருவர் பலி ஆனார்கள் அவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு ஆகஸ்ட் 15 அன்று தலித் பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றுவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!