Planting of 1,63,997 saplings across the district under the Green Tamil Nadu Action Plan: Perambalur Collector Information!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், மாவட்ட வன துறையின் சார்பில் “பசுமை தமிழகம்” இயக்க திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 63 ஆயிரம் 997 மரக்கன்றுகளை நடும் பணிகளை கலெக்டர் வெங்கடபிரியா இன்று தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்ட வனத்துறையின் சார்பில் “பசுமை தமிழகம்” இயக்க திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. சித்தளி காப்பு காடு, ரோவர் கல்லூரிகளில் இத்திட்டத்தின் கீழ் இம்மாதம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட தொழிலாளர் நல அலுவலகத்தில் 10 மரக்கன்றுகளும், பெரம்பலூர் வனச்சரகத்தில் 1,08,967 மரக்கன்றுகளும், வன விரிவாக்க மையத்தில் 50,000 மரக்கன்றுகள், வேப்பந்தட்டை சரகத்தில் 5,000 மரக்கன்றுகள் என மொத்தம் 1,63,997 மரக்கன்றுகள் இத்திட்டத்தின் கீழ் நட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் சித்தளி காப்புக்காடு, பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகங்கள், விவசாய நிலங்களில் வேம்பு, புங்கன், மருது மற்றும் நாவல் போன்ற உள்நாட்டு மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சுற்றுச்சூழலை பேணி பாதுகாக்க பொதுமக்கள் தங்களால் இயன்ற அளவு மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வளர்க்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மூர்த்தி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் சாந்தி மற்றும் மாவட்ட வனச்சரக அலுவலர்கள் பா.பழனிகுமரன், வே.சுப்ரமணியன், எம். இராஜசேகரன், மு.மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!