PMK Flag cutting in 2 places in Perambalur! Police investigation!
பெரம்பலூர் நகரில் இன்று இரு இடங்களில் மர்ம நபர்களால் பாமக கொடி அறுக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று பாமகவின் 34 ஆண்டை தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் கொண்டாடி வரும் நிலையில் நேற்றிரவு மர்ம நபர்கள் பெரம்பலூர் கல்யாண் நகர், அரணாரை பகுதியில் இருந்த 2 கொடிக் கம்பத்தில் பறக்க விடப்பட்ட கொடிகளை பிளேடு மூலம் அறுத்ததில் கொடிகள் கீழே விழுந்தது. இது குறித்து பாமக கட்சியினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அருகே உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். அக்கம்பங்களில் புதிய வர்ணம் பூசி, புதிய கொடிகளை ஏற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை இன்று காலை ஏற்படுத்தியது.