Police awareness rally on wearing helmets in Perambalur!
பெரம்பலூரில் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவதன் அவசியம் குறித்தும், பொதுமக்களுக்கு சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, பெரம்பலூர் மாவட்ட போலீசார் கலந்துகொண்ட இருசக்கர வாகன பேரணி நடந்தது. அதனை ஏ.எஸ்.பி கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நுழைவாயிலில், புறப்பட்ட பேரணி ரோவர் ஆர்ச், சங்குப் பேட்டை, கடைவீதி, காமராஜர் வளைவு, புதிய பேருந்து நிலையம், 4 ரோடு, துறைமங்கலம், 3 ரோடு, பங்களா ஸ்டாப் வழியாக மீண்டும் பாலக்கரையில் வந்தடைந்தது. இதில் தலைக்கவசம் அணிவதன் பயன்கள் குறித்தும், சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும் காவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் டி.எஸ்.பி ஜவஹர் தலைமையில் தலைகவசம் அணிவோம் விபத்தில்லா பயணம் தொடர்வோம் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல்துறையினர், பொதுமக்களுடன் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.