Police Investigate Robbery of Rs 1 Lakh Jewels in Perambalur Temple!
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில், உப்போடை உள்ளது. அதனருகே தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான சாய்பாபா கோயில் உள்ளது. அதன் பூசாரி, பூஜைகள் செய்து விட்டு, கோயிலை நேற்று இரவு 11 மணிக்கு பூட்டி சென்றார்.
இன்று அதிகாலை 4 மணிக்கு பூஜைகள் செய்ய கோயிலை சுத்தம் செய்ய வந்து பார்த்த போது, கோயிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது, உள்ளே சென்று பார்த்த போது சாமி சிலையின் கழுத்தில் கிடந்த ஒன்றரை தங்க செயின் மற்றும் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் சுமார் 40 ஆயிரத்தை மர்ம மனிதர்கள் எடுத்து தப்பி சென்றது தெரியவந்தது.
இது குறித்து கோயிலின் பூசாரி சவுந்திரராஜன் (55) கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், கோயிலில் கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை தடய அறிவியல் துறையினர் உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சாமி கோயிலில் கொள்ளையடித்து சென்ற சம்பபவம் உப்போடை பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.