Police who went to give Relief Fund to the deceased put the brakes on the bus in front of the car accident: one killed! 3 people injured !!
பெரம்பலூர் அருகே இன்று காலை பேருந்தும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் பெண் போலீஸ் ஒருவர் பலியானர். 3 பேர் படுகாயமடைந்து திருச்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சென்னை ஆவடியில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு தனியார் பேருந்து மூலம் 55 பேர் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதோ போல் மதுரை சேர்ந்த போலீசார் கள்ளக்குறிச்சியில் இறந்து போன காவலர்களுக்கு நிதி திரட்டி ரூ. 12 லட்சத்து 32 ஆயிரத்தை எடுத்து கொண்டு இரண்டு காரில் மதுரை, உசிலம்பட்டியை சேர்ந்த ராமர் (53), சிவகங்கையை சேர்ந்த பூபதி (45), மதுரையை சேர்ந்த தனசேகர் (42), மற்றும் அழகுவேல்வள்ளி (42), தேனியை நட்ராயன் (46) சித்தரைவேல் (46), திண்டுக்கல் வீரராகவன், கோவில்பட்டியை சேர்ந்த நிர்மலா ஜெரால்டு மற்றும் தேனியை உமாவாசுகி (44) ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். இவர்களது இரண்டு கார்களும் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே அதிகாலை 3 மணி அளவில் வந்த போது எதிர்பாராதவிதமாக சென்னை நோக்கி முன்னே சென்று கொண்டிருந்த பஸ் திடீர் பிரேக் பிடித்ததால் பின்னால் சென்ற கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியது. இதில் கார்கள் பலத்த சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும், தீயணைப்பு மற்றும் விபத்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதில் விபத்தில் உமாவாசுகி பரிதாபமாக உயிரிழந்தார். காரில் பயணித்த மற்ற அனைவரும் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திருநெல்வேலி மாவட்டம், பெருமாள்புரத்தை சேர்ந்த பஸ் டிரைவர் முத்துகிருஷ்ணனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.