Poomi Pooja near in Perambalur for Keelapuliyur to Paravai Road works

பெரம்பலூர் அருகே 4 கோடியே 46 லட்சம் மதிப்பிலான சாலைப்பணியை குன்னம் எம்.எல்.ஏ. ஆர்.டி. இராமச்சந்திரன், சிதம்பரம் தொகுதி எம்.பி சந்திரகாசி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழப்புலியூர் கிராமத்தில், பாரத பிரதமர் கிராம சாலைத்திட்டத்தின் கீழ் கீழப்புலியூர் முதல் பரவாய் வரைக்கும் 10.5 கி.மீ தூரம்உள்ள சாலையை ரூ. 4 கோடியே 45 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கு இன்று பூமி பூஜை நடந்தது.

பூமி பூஜையை பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி. ராமச்சந்திரன், சிதம்பரம் தொகுதி எம்.பி சந்திரகாசி ஆகியோர்
தொடங்கி வைத்தனர். அதிகாரிகள் , கீழப்புலியூர் அதிமுக கிளைக்கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தால், கீழப்புலியூர் எழுமூர், ஆய்க்குடி, சமத்துவபுரம், பரவாய் கிராம மக்கள் மற்றும் அவ்வழியாக அக்கம் பக்கம் செல்லும் கிராம வாசிகள் பயன்பெறுவார்கள்.

முன்னதாக, கீழப்புலியூர் கிராமத்திற்கு வருகை தந்த குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி ராமச்சந்திரன் மற்றும் எம்.பி சந்திரகாசிக்கு வானவேடிக்கையுடன் மேளதாளம் முழங்க கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!