Postgraduate writing the TRB examination in Perambalur district: 4,718 people write

பெரம்பலூர் : ஜுலை. 2. அன்று நடைபெறவுள்ள முதுகலை ஆசிரியர் போட்டி எழுத்துத் தேர்வினை சிறப்பாக நடத்திட மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.சாந்தா தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது

பெரம்பலூர் மாவட்டத்தில் 2.7.2016 அன்று முதுகலை ஆசிரியர் போட்டி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி, தனலட்சுமி சீனிவாசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி,

தந்தை ஹேன்ஸ் ரோவர் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, பனிமலர் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சாரதாதேவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 13 மையங்களில் இத்தேர்வு நடைபெறவுள்ளது.

மொத்தம் 4,718 பேர் இத்தேர்வினை எழுத உள்ளனர். அனைத்துத் தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதுபவர்களுக்குத்தேவையான அடிப்படை வசதிகளும் இருப்பதை முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், காவல்துறையினர் அனைத்து மையங்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். வினாத்தாள் வைக்கப்படக்கூடிய பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதலாக காவல்துறையினர் பாதுகாப்பளிக்க வேண்டும்.

வினாத்தாள் வைக்கும் அறை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்ப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும், மாவட்டக் கல்வி அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குநர் உஷாராணி தேர்வுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளைப் பார்வையிடவுள்ளார்.

தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களை தகுந்த பாதுகாப்புடன் கொண்டுசெல்ல வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்விற்கான பணிகளில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் தேர்வு மையங்களுக்கு ஒருவர் வீதம் தலா ஒவ்வொரு பிரிவிலும் 13 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் 9 நபர்கள் பார்வைத்திறன் குறைபாடுடையவர்கள் ஆவர். இவர்கள் தேர்வெழுதுவதற்கு உதவியாக 10 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் இரண்டு அலுவலர்கள் வீதம் 26 நபர்கள் அடங்கிய 13 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறையினர், அலுவலக உதவியாளர்கள், நீரளிப்பவர், துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் 496 நபரர்கள் தேர்வுப்பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

முதுகலை ஆசிரியர் போட்டி எழுத்துத் தேர்வினை சிறப்பாக நடத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், முதன்மைக்கல்வி அலுவலர் அருள்மொழிதேவி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!