Preparatory Training for Civil Service Competitive Examination for Perambalur District, Fisheries Community; Collector Info!

பெரம்லூர் மாவட்ட மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் பங்கேற்க ஆயத்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது, விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தொpவித்துள்ளார்.

மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டி தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்தியேக பயிற்சியளிக்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்துறை துணை, இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் நேரில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் மீன்துறை இணையதளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் அரியலூர் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம். அறை எண் 234. (2வது மேல்தளம்) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம். அரியலூh;-621704 என்னும் முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 19.02.2021 பிற்பகல் 05.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு மீன்வள ஆய்வாளர் அலுவலகம், எஸ்.கே.சி காம்ப்ளக்ஸ், புதிய பேருந்து நிலையம் அருகில், பெரம்பலூர் அலுவலகத்தை நேரில் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!