Prithiyangadevi Nikulambala Yagam at Phoolambadi Thirupati Amman Temple: International businessman Dato.S. Prakadeeshkumar led!
பூலாம்பாடி திரவுபதி அம்மன் கோவிலில் பிரித்தியங்காதேவி நிகுலம்பலா யாகம் மற்றும் 108 கலச பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.
பெரம்பலூர் அருகே உள்ள பூலாம்பாடியில் திரவுபதி அம்மன் கோவில் புணரமைக்கப்பட்டு கடந்த ஜுலை 6 ந்தே மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலபூஜையும், அம்மனுக்கு உகந்த நாட்களில் சிறப்பு பூஜையும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கோவிலில் பிரித்தியங்காதேவி நிகுலம்பலா யாகம் மற்றும் 108 கலசபூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பூஜைக்கு டத்தோ.S.பிரகதீஸ்குமார் தலைமையில் நடந்தது. கோவில் அறக்கட்டளை நிர்வாகி சூர்யபிரகாசம் முன்னிலை வகித்தார். சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகத்தின்பலன்களை கூறி யாகத்தினையும் பூஜைகளையும் நடத்தி வைத்தனர்.
இந்த யாகத்தில் கலந்து கொள்ளும் போது திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், வேலை வாய்ப்பு மற்றும் பல்வேறு நன்மை உள்ளதால் பூலாம்பாடி, அரசடிகாடு , கடம்பூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த திரளான பெண் பக்தர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.
மேலும் சிறப்பு யாக பூஜையில் மலேசியா பாஸ்கரன், மன்மணி, மணிகவுண்டர், ராஜ், மோகன், ராமதாஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பூலாம்பாடி சதீஷ், கடம்பூர் பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
விளம்பரம்: